சமையல் சந்தேகங்கள்

மிருதுவான சப்பாத்திக்கு என்ன செய்ய வேண்டும்?

1. வீட்டில் தயாரிக்கும் பனீர், கடைகளில் விற்பது போல் கட்டியாக இருப்பதில்லையே? ஏன்?

பால் திரிந்து பனீரை ஒரு துணியில் வடிகட்டியதும், அதை துணியுடனே குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு துணியுடனே ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மார்பிள் சப்பாத்திக் கல் அல்லது இடிக்கும் சிறிய உரல் வைத்து, ஒரு மணி நேரம் கழித்து துணியை எடுத்து விட்டு துண்டுகள் போடவும். அழகாக சதுர வடிவத் துண்டுகளாக கடைகளில் கிடைப்பது போலவே வரும்.

2. சேமியா உப்புமா செய்யும்போது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறதே? இதைத் தடுப்பது எப்படி?

சேமியா வாங்கியவுடன், அதை வெறும் வாணலியில் சிறிது வறுத்து, ஆறியவுடன், ஒரு டப்பாவில் எடுத்துவைத்து சேமியா உப்புமா செய்யும்போது பயன்படுத்தினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick