சமையல் சந்தேகங்கள்

வீட்டிலேயே செய்யலாம்... ஃபிங்கர் சிப்ஸ்!

வீட்டிலேயே ‘செஷ்வான் சாஸ்’ தயாரிப்பது எப்படி?

ஒரு கைப்பிடி அளவுக்கு காய்ந்த மிளகாயை எடுத்து, சுடுநீரில் ஊறவைத்துக் கொள்ளவும். நன்கு ஊறியதும் எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய 2 பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கி, இதனுடன் தக்காளி சாஸ் 2 டீஸ்பூன், அரை டீஸ்பூன் வினிகர் சேர்த்து, அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை சிம்மில் வைத்து வதக்கவும். இதுதான் செஷ்வான் சாஸ். இதனுடன் விருப்பமிருந்தால், அரை டீஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கலாம்.

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெளியே எடுத்து உலர்ந்த துணியில் உலர்த்தி வைக்கவும். தண்ணீர் நீங்கி, உருளைக்கிழங்கு நன்றாகக் காய்ந்ததும் எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும். தேவைப்படும் போது ஃப்ரீசரில் எடுத்து ரூம் டெம்பரேச்சருக்கு கொண்டு வந்து பிறகு சூடான எண்ணெயில் பொரித்தால், ஹோட்டலில் கிடைப்பது போன்ற ஃபிங்கர் சிப்ஸ் ரெடி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick