சாப்பிடுவது எப்படி?

ன்றைய காலகட்டத்தில் வேலை வேலை என்று அனைவரும் ஓடிக்கொண்டிருக்க, நாம் உணவுப் பழக்கத்தின் மீது கவனமும் அக்கறையும் செலுத்துவதில் கவனக்குறைவாக இருக்கிறோம். நம் முன்னோர்களின் உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்களில் இருந்து அதிக அளவில் நாம் மாறுபட்டு வருகிறோம். இத்தகைய சூழலில், அன்றாடம் நாம் சாப்பிடும் உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான தாரிணி கிருஷ்ணன்.

“வாழை இலையில் சாப்பிடுவதை கூடுமான வரையில் கடைப்பிடியுங்கள். இப்போது பல இடங்களில் வாழை இலைகள் எளிதாக கிடைக்கின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால், இலையில் இருக்கும் சத்துக்கள் உணவில் கலக்கின்றன. இது ஜீரணம், நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவற்றை அதிகரிக்கும். வாழை இலை இல்லாதபட்சத்தில் எவர்சில்வர் தட்டுகளில் உண்ணலாம். பிளாஸ்டிக் பக்கமே போகாதீர்கள். இப்போதெல்லாம் வாழை இலை வடிவிலேயே பிளாஸ்டிக், பேப்பர் இலைகள் வந்துவிட்டன. அவற்றில் சூடான உணவை உண்ணும்போது, அதில் பூசப்பட்டிருக்கும் ரசாயனங்கள், உடலில் கலந்தால் உபாதைகள் வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick