விண்வெளி கிச்சன்

தினசரி நாம் உணவு எடுத்துக் கொள்வதென்பது நமக்கு சாதரண விஷயம். ஆனால், விண்வெளி செல்லும் விஞ்ஞானிகளுக்கு, அதுவே ஒரு பெரிய அசைன்மென்ட்; பயிற்சி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய வேலை. ‘இதைத்தான் சாப்பிட வேண்டும், இவ்வளவுதான் சாப்பிட வேண்டும், அதை இப்படித்தான் டிஸ்போஸ் செய்யவேண்டும்’ என்று ஏகப்பட்ட விதிகள்!

நீண்ட பயணத்துக்கு நாம் புளியோதரை கட்டி எடுத்துச் செல்வதுபோல, ஒரு வாரம், இரண்டு வாரங்கள் என பயண காலத்துக்கு ஏற்ப விண்வெளி வீரர்களும் நிறைய பாக்கெட்டுகளில் உணவு வகைகளை எடுத்துச் செல்வார்கள். ஆனால், அதில் பல சிக்கல்கள் உள்ளன. விண்கலத்தில் உணவைச் சூடாக்க மைக்ரோவேவ் அவன் இருக்கும். ஆனால், உணவு கெடாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டி சாத்தியமில்லை. எனவே, அதற்குத் தகுந்தாற்போல மேக்ரோனி, பிரவுனி என்று உணவுகள் எடுத்துச் செல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick