ஹோட்டல் ரிவ்யூ: மண்பானை சமையல்... மணக்கும் பிரியாணி!

தென் மாவட்டங்களில் திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்கள் சுவையான உணவுக்கு பெயர் போனவை. குறிப்பாக, திண்டுக்கல் பிரியாணிக்கு பெரியளவில் வரவேற்பு உண்டு. விளம்பரங்கள் மூலமாக சில பெரிய நிறுவனங்கள் பிரபலமாகி இருந்தாலும், திண்டுக்கல்லில் சுவையான பிரியாணி மற்றும் உணவு வகைகள் வழங்கும் சிறிய உணவகங்களும் பல உண்டு. அவற்றில் ஒன்று ‘கோல்டு ஸ்டார் பிரியாணி ஹோட்டல்’. இங்கு, பிரியாணியுடன் மண்பானையில் சமைத்த மதிய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த இதழ் ஹோட்டல் ரிவ்யூவுக்காக கோல்டு ஸ்டார் ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்றோம். உணவுகளை ருசி பார்க்க, தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியர் விஜயலட்சுமி, அழகுக்கலை நிபுணர் சாந்தி ஆகியோரையும் நம்மோடு அழைத்துச் சென்றோம்.

ஆர்.எஸ் சாலையில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் மதியம், இரவு என இரண்டு வேளைகள் இயங்கினாலும், இந்த உணவகத்தில் மதிய உணவுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கடை முகப்பு கவர்ச்சிகரமாக இல்லையென்றாலும் விசாலமான பார்க்கிங் வசதி இருக்கிறது.
ஹோட்டலுக்கு வெளியே இடதுபுறம் கிச்சன். வலதுபுறம் சைனீஸ் துரித உணவு தயாரிக்கும் கிச்சன் உள்ளது. ஹோட்டலுக்குள் நுழைந்ததும் முதல் ஹால் நான்-ஏ.சி ஹால். அதற்கு அடுத்த ஹால் ஏ.சி-ஹால். மதிய உணவு ஏ.சி ஹாலுக்குள் மட்டும்தான் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசல் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது, ஹோட்டல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick