உணவுகளை உணர்வுகளாக்கும் கார்னிஷிங்

ணவின் அழகு பார்ப்பவர்களின் கண்களை நிறைத்து, வயிற்றையும் நிறைக்க வேண்டும். அதற்கு மிகமுக்கியமான விஷயம் உணவை நாம் எப்படிப் பரிமாறுகிறோம் என்பதே.

‘‘அதெல்லாம் ஹோட்டல் செஃப்களுக்குத்தான் கைவரும். நமக்கெல்லாம் வராதுப்பா” என்பவர்களுக்கு ‘அது ரொம்ப ஈஸி’ என்று தன் அனுபவங்களையே உங்களுக்கு டிப்ஸாக தந்திருக்கிறார் டாக்டர் செஃப் வினோத் குமார், சாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை பயிற்றுநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி.

“ஒரு பாட்டு பாடுறப்ப... அல்லது இசையை கேட்குறப்ப உங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள் இல்லையா?! அப்படித்தான் ஒரு உணவை பார்க்கிறபோது அதனுடைய மணத்தை மூளை கணித்து, அதன் சுவை எப்படியிருக்கும் என்று மனமும், நாக்கும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும். இந்த உலகில் மனித மனம் நிறைவடைகிற ஒரே ஒரு விஷயம் உணவு மட்டும்தான். அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தில் கார்னிஷிங் என்று சொல்லப்படுகிற டெகரேஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரியாணியைப் பரிமாறும்போது ஒரு சின்ன துண்டு எலுமிச்சை வைப்பதில் ஆரம்பிக்கிறது உங்களுடைய கார்னிஷிங். மஞ்சள் நிறத்தில் நம்முடைய மனதில் பதிந்துபோன பிரியாணியை கூடுதலாக ஒருவாய் சாப்பிட வைக்கத் தூண்டுவது கார்னிஷிங். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick