ஜெயின் ஸ்பெஷல் ரெசிப்பி

 லாப்சி
 பேரீச்சை கீர்
 காலா சன்னா
 மூங்க் தால் கிச்சடி
 அம்ருத் கி சப்ஜி
 பன்கி
 தூத் தண்டாய்
 கட்டா மாக்
 கட்டா டோக்ளா
 மூங்தால் கச்சோரி

ஹிம்சை எனும் அரிய தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ஜெயின் (சமணம்) சமூகத்தின் உணவுமுறையிலும் அதே உறுதியுண்டு. இந்தியாவின் பெயர் சொல்லும் வகையில் சைவ உணவு வகைகளை வளர்த்தெடுத்த பெருமையும் இச்சமூகத்துக்கு உண்டு. கோதுமை, அரிசி, அவரை, பருப்பு வகைகள் ஆகியவை ஜெயின் உணவுகளில் அதிகம் இடம்பெறுகின்றன. இயற்கையாகவே தம் வாழ்வை முடித்துக்கொள்ளும் தாவரங்களின் பாகங்கள், இயல்பாகவே பழுத்து மரத்திலிருந்து விழும் பழங்கள் போன்றவையே ஜெயின் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பூமிக்கு அடியில் விளையும் வேர்க்காய்கறிகள் தவிர்க்கப்படுகின்றன. உயிரினங்கள் உள்பட அசையக்கூடிய எதற்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே இதன் பொருள்.

மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட சமணக் கொள்கைகளை கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் பின்பற்றி வருகின்றனர். எளிய மக்களுக்கு உணவு படைத்தல், விரதம் இருத்தல், உணவை வீணாக்காமல் பயன்படுத்துதல், வடிகட்டிய நீரையே பருகுதல், சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையிலான நேரங்களில் மட்டுமே உண்ணுதல்... இதுபோன்ற செயல்கள் ஜெயின் உணவுத் தத்துவத்தில் இடம்பெறுகின்றன. 

இதோ... மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவைமிக்க ஜெயின் உணவுகளை வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick