டெலிசியஸ்! - பேக்கிங் வொர்க்‌ஷாப்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து தொடர்கின்றன கொண்டாட்டங்கள். பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள் என எந்த நிகழ்வுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியது `கேக்’தானே? அனைவராலும் விரும்பப்படும் கேக்கை வீட்டிலேயே தயாரித்துச் சுவைத்து மகிழ வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறது `அவள் விகடன் கிச்சன்’ இதழ் மற்றும் `கேக் மால்’ இணைந்து வழங்கும் டெலிசியஸ் குக்கரி வொர்க்‌ஷாப்.

டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று  நடக்கவிருக்கும் இந்த வொர்க்‌ஷாப்பில் ஸ்பாஞ்ச் கேக் பேக்கிங், கப் கேக்ஸ், குக்கீஸ், ஐஸிங் டெக்னிக்ஸ், சாக்லேட் கார்னிஷிங்  உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். முட்டை சேர்த்தது (with egg), முட்டை சேர்க்காதது (eggless) என இரண்டு பயிற்சிகள் உண்டு.

எக்லெஸ் பேக்கிங் பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வித் எக் பேக்கிங் பயிற்சி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தனித்தனி பயிற்சிகளாக நடக்கவிருக்கிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.1000.

சிறப்புச் சலுகையாக டிசம்பர் 5-ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூ.750. பயிற்சிக்குத் தேவையான பொருள்களும் உபகரணங்களும் வழங்கப்படுவதுடன், அவள் விகடன் இதழுக்கான ஆறு மாதச் சந்தாவும் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

பயிற்சி நடக்கும் இடம்: கேக் மால், வேளச்சேரி, சென்னை - 42.

முன்பதிவுக்கு: http://bit.ly/2zbFM0y

மேலும் விவரங்களுக்கு: 044-28524054

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick