தி போர்ட் கஃபே - திரும்பிய பக்கமெல்லாம் துறை முகத்தின் சாயல்!

ஆர்.வைதேகி - படங்கள்: தே.அசோக்குமார்

வாரத்தின் சில நாட்கள் வெளியில் சாப்பிடுவது என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்துக்கும் கட்டாயக் கலாசாரமாக மாறிவிட்டது. புதிதாக என்ன சாப்பிடலாம் என்கிற தேடல் மாறி, புதிதாக எங்கே சாப்பிடலாம் என்கிற ஆர்வமே மக்களிடம் அதிகரித்திருக்கிறது. சாப்பாடு மட்டுமல்ல... சாப்பிடுகிற சூழலிலும் புதுமை தேவைப்படுகிறது இன்று. மக்களின் அந்தத் தேவையை நிறைவேற்றுவதே தீம் ரெஸ்டாரண்ட்டுகளின் நோக்கம். ஒரு காலத்தில் அரிதாகவும் அபூர்வமாகவும் இருந்த தீம் ரெஸ்டாரண்ட்டுகள், சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன... ஆச்சர்யப்படுத்துகின்றன. விதம் விதமான தீம்கள்... வித்தியாசமான ஐடியாக்களில் அசத்துகிற தீம் ரெஸ்டாரண்ட்டுகள் சென்னையில் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ‘தி போர்ட் கஃபே’. பெயருக்கேற்றபடி துறைமுகத்துக்குள் நுழைந்த உணர்வைத் தருகிறது ரெஸ்டாரண்ட்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick