உணர்வோடு ஓர் உணவகம்!

80 ஆண்டுகளாக மும்பையில் இயங்கிவரும் தென்னிந்திய உணவகம் மணீஸ் லஞ்ச் ஹோம். மும்பையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்ட உணவகம். ஞாயிற்றுக்கிழமைகளில் வெங்காயம் சேர்க்காத சாம்பார் தயாரிப்பதே இவர்களின் தனி அடையாளம். இந்த ஹோட்டலின் இரண்டாம் தலைமுறை உரிமையாளர் நாராயணசாமி தன் டிரேட் மார்க் முழுக்கை வெள்ளைச் சட்டையில் புன்முறுவலுடன் பேசினார்.

``எங்களது பூர்வீகம் பாலக்காடு, சிறுவயதில் பெற்றோரை இழந்த என் தந்தை சுப்பிரமணிய ஐயர், பல நகரங்களில் சமையல் வேலை செய்து, 1920-களில் மும்பைக்கு வந்தார். டிபன் மற்றும் சாப்பாடு தயாரித்து, சைக்கிளில் எடுத்துச் சென்று, வீடு மற்றும் அலுவலகங்களில் டெலிவரி செய்தார். தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்படுவதை உணர்ந்து, 1937-ல் மாதுங்காவில் ஹோட்டலை ஆரம்பித்தார். 1978-ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் என் தந்தை மரணம் அடைந்தார். குடும்பத்தின் மூத்த பையன் என்பதால் நான் ஹோட்டலைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். சியான் மற்றும் செம்பூரில் எங்கள் கிளைகள் செயல்படுகின்றன. என் தந்தையின் கைப்பக்குவத்தை ருசித்த வாடிக்கையாளர்கள், கடந்த 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick