“சமையல் வாசனை வீட்டையே தூக்கும்!”

மாஸ்டர் செஃப் இந்தியா மகிழ்ச்சி

பி.பி.சி நடத்தும் மாஸ்டர் செஃப் போட்டி உலகளவில் ரொம்பவே பிரபலம். மாஸ்டர் செஃப், மாஸ்டர் ஜூனியர் செஃப் என விதவிதமான சமையல் போட்டிகளாக, கடுமையான பல ரவுண்டுகளுடன் நடத்தப்படுகிறது இந்தப் போட்டி. ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்தப் போட்டி யூடியூப்பிலும் செம ஹிட்! அதில், 2016-ம் ஆண்டுக்கான ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ பட்டத்தை வென்று 50 லட்ச ரூபாய் பரிசு பெற்றுள்ளார் கீர்த்தி பௌதிகா. வெற்றியின் பூரிப்பு ததும்புகிறது அவருடைய முகத்தில்!

‘`எங்கள் வீட்டில் ஒட்டுமொத்தமாக 16 பேர். பெரிய கூட்டுக்குடும்பம். அதனால் எப்போதும் சமையல் வாசனை எங்கள் வீட்டையே தூக்கும். அப்பா, எங்கள் குடும்பத் தொழிலான டெக்ஸ்டைல் பிசினஸை நடத்துகிறார். அம்மா, குடும்ப நிர்வாகி. அவ்ளோ பெரிய குடும்பத்துல அசரடிக்கிற சமையல் வாசனை எனக்குள் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்திச்சு.

அதனால், இயல்பாவே சமையலைச் செய்து பார்க்க ஆரம்பிச்சேன். வீட்டுல உள்ளவங்களும் சின்னப் பொண்ணுதானேன்னு பார்க்காம, நான் செய்யறதைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு, `இது சரியில்லை, அதுல உப்பு கொஞ்சம் சேர்த்திருக்கணும், முந்திரி கொஞ்சம் தூக்கலாப் போயிடுச்சு’ன்னு கமென்ட் கொடுத்து என்னோட சமையல் முன்னேற்றத்துக்குக் காரணமா இருந்தாங்க” என்கிற கீர்த்தியின் சமையல், ஆலமரம் போல கிளை பரப்ப ஆரம்பித்தது பதினொன்றாம் வகுப்பில் தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick