“சமையலறை... சிறையல்ல... சிறகுகள்!”

ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

கேரளாவின் திருச்சூரில் வசிக்கும் சரஸ்வதி, நம் சென்னைப் பெண். அங்கு எஃப்.எம் ரேடியோ, பத்திரிகைகளில் சமையல் குறிப்புகளில் கலக்கிக்கொண்டி ருக்கிறார். ``எங்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் சமைப்பது பெரும்பாலும் என் அப்பாவின் வேலையாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒரு புது உணவைச் சமைத்துக்கொடுக்கும் அப்பாவுக்குச் சமையலில் உதவச்சென்று, மெள்ள மெள்ள எனக்கும் அதில் ஆர்வம் வந்துவிட்டது. கல்லூரிக் காலத்தில் பல சமையல் போட்டிகளில் கலந்து கொண்டேன்.

திருமணமாகி கேரளாவுக்கு வந்தேன். கணவர் விஸ்வநாதன் திருச்சூரில் தொழிலதிபர். விஷால், விவேக் என்று இரண்டு பிள்ளைகள். வாழ்க்கை உருண்டோடி பையன்கள் இருவரும் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பொறுப்புகள் குறைந்தன.  வாழ்க்கை போரடிக்க, ‘உனக்குப் பிடித்தது எதையாவது செய்யேன்’ என்றார்கள் என் பிள்ளைகள். ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த என் பையனின் கல்லூரி நண்பர்களுக்கு நான் செய்துகொடுத்த பிரத்யேக டிஷ் ஒன்றுக்கு அவர்கள் கொடுத்த பாராட்டுகளுக்கு இடையே என் மகன் கேட்டான்... ‘ஏம்மா உன் சமையலையே நீ கொண்டாடக்கூடாது?’ என்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்