தீபாவளி பலகாரங்கள்... சில சந்தேகங்கள், விளக்கங்கள்!

எஸ்.ராஜகுமாரி

க்ஸாம் எழுதிவிட்டுக் காத்திருக்கும் மாணவர்களைவிட, சமைத்துப் பரிமாறும் இல்லத்தரசிகளுக்கு, `ரிசல்ட் எப்படி வருமோ?’ என்ற பதைப்பதைப்பு அதிகம். பண்டிகை உற்சாகத்துடன் பரபரப்பும் பற்றிக்கொள்ளும் தீபாவளி நேரத்தில், இனிப்பு - கார வகைகளைச் செய்ய ஆரம்பிக்கும் முன்பே சில முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டால், சமையல் பரீட்சையில் `டிஸ்டிங்ஷன்’ வாங்கலாம். அந்த வகையில் தீபாவளி சமையல் தொடர்பான சில சந்தேகங்களுக்கு, தன் அனுபவங்களை முன்மாதிரியாக வைத்து விளக்கங்கள் தருகிறார் சமையல் கலைஞர் எஸ்.ராஜகுமாரி.

அல்வாவுக்குக் கேரட், பீட்ரூட் துருவும்போது கடைசி வரை துருவுவது எப்படி?

கேரட், பீட்ரூட்டைத் துருவத் தொடங்குவதற்கு முன்பே அருகில் ஒரு ஃபோர்க் வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைப் பாதி துருவியதும் சிறியதாகிப் போன துண்டுகளை ஃபோர்க்கில் அழுத்திக் குத்திக்கொண்டு துருவினால், கைகளில் அடிபட்டுக்கொள்ளும் பயம் இல்லை; முழுவதையும் துருவி முடிக்கலாம்.

தேங்காய் பர்ஃபி செய்யும்போது பதம் தவறிவிட்டால் எப்படி சரி செய்வது?

தேங்காய் பர்ஃபி தயாரிக்கும்போது சில நேரங்களில் பதம் தவறி முறுகிவிடலாம். அதைப் பாலில் ஊறவைத்து, மீண்டும் கிளறி இறக்கும்போது நெய்யில் வறுத்த கடலை மாவைச் சிறிது தூவி இறக்கினால் தேங்காய் பர்ஃபி கெட்டியாகவும், சரியான பதத்துக்கும் வந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick