சட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்!

அவள் கிச்சன் டெலிசியஸ் வொர்க்‌ஷாப் கொண்டாட்டம்மு.பார்த்தசாரதி படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், பா.காளிமுத்து.

‘காலை வேளையில் கணவன் மனைவி இருவரும் அரக்கப்பரக்க வேலைக்குக் கிளம்பும் இந்த அவசர யுகத்தில் ஆரோக்கியமான உணவுகளை ரசித்துச் சமைத்து, ருசித்துச் சாப்பிடுவதெல்லாம் நடக்கிற காரியம்தானா?’ - இந்தக் கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயல்புதான். ஆனால், சத்தும் சுவையும் மிக்க உணவுகளைக் குறைவான நேரத்துக்குள் சமைக்க முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது சமீபத்தில் `அவள் விகடன் கிச்சன்’ வழங்கிய ‘டெலிசியஸ் குக்கரி வொர்க்‌ஷாப்.’ இந்தச் சுவைப்பட்டறை ஜூலை 30 அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் (Venue Partner) நடந்தது. சமையல்கலை நிபுணர்கள் `மெனுராணி’ செல்லம், ரேவதி சண்முகம், சந்திரலேகா ராமமூர்த்தி ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்ததோடு, அருமையான ரெசிப்பிகளையும் செய்துகாட்டினார்கள். காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த உணவுத் திருவிழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட பல இடங்களிலிருந்தும் அவள் விகடன் வாசகிகள் கலந்துகொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick