500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து!

சூர்ய பாரதி.அ.அ , படங்கள்: படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சாப்பிடுவது ஒரு கலை என்றால்; சாப்பிட வைப்பதும் ஒரு கலைதான்.

பெய்துகொண்டிருந்த மழை கொட்ட ஆரம்பித்திருந்த தருணம். “மச்சான் இன்னிக்கு உன் பிறந்தநாள்; கண்டிப்பா ட்ரீட் வெச்சே ஆகணும்” என்றேன் பர்த்டே பாயிடம். “உங்களை எல்லாம் ட்ரீட்டுக்கு கூட்டிட்டுப் போனா ஆயிரத்துக்கு மேலே பில்லைத் தீட்டுவீங்களே... முடியாது” என்றான் பர்த்டே பாய். “அதெல்லாம் வேணாம் மச்சான்... சிக்கன், மட்டன், மீன்... எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம். அன்லிமிடெட். வெறும் ஐந்நூறு ரூபாய் தான். அங்கே பாபி சிம்ஹா, பிரபு, ராதாரவினு எல்லாரும் குடும்பத்தோட வந்து சாப்பிட்டுருக்காங்கடா” என்றான் உடனிருந்த நண்பன். அப்புறம் என்ன? கட்டுப்பாடின்றி எங்கள் இருவருக்கும் வாய் பிளந்துகொண்டது.

“என்ன ஹோட்டல்டா அது?”

“யு.பி.எம்” என்றான்.

யு.பி.எம்மை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பமானது. திருப்பூர் மாவட்டம், கோபி செல்லும் வழியில் குன்னத்தூர் டவுனை அடுத்துள்ள, சீனாபுரத்தில் அமைந்துள்ளது இந்த யு.பி.எம் கறி விருந்துக் கடை. திருப்பூரிலிருந்து ஒரு மணி நேரப் பயணம்.

உள்ளே செல்லும் முன்னரே வெளியே அவ்வளவு கூட்டம். மூவரும் கஷ்டப்பட்டு உள்ளே சென்றால் அறுபது வயதில் நெற்றி முழுவதும் பட்டையுடன் ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick