பூண்டு சட்னியும் விஜயா அத்தையும்!

உணவு வலை, ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

ரண்டு நாள்களுக்கு முன்பு தஞ்சாவூர் சென்றிருந்தேன். நானும், என் மாமா பையன் தீனாவும், என் தம்பியும் இரவெல்லாம் ஊரைச் சுற்றிவிட்டு, வெளியிலேயே சாப்பிட்டோம். இரவு இரண்டரை மணிக்குத்தான் வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்த விஜயா அத்தைக்கு தற்போது 74 வயதாகிறது.

என்னைப் பார்த்ததும், “உனக்கு பூண்டு சட்னி பிடிக்கும்னு அரைச்சு வெச்சேன். நீ சாப்பிடவே வரலை” என்றார்.

நான் தம்பியிடம், “அத்தை செய்யும் பூண்டு சட்னியை அடிச்சுக்கவே முடியாது. இப்பவே ரெண்டு தோசை சுடுங்க அத்தை, சாப்பிடுறேன்” என்றவுடன் அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்