நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!

ஞா.சுதாகர்

ம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம்.

நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம் பிரகாஷிடம் கொண்டு சென்றோம்.

“நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலாவருகின்றன. முதலில் அவற்றிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். உணவுக்கான கோழிகளை நாட்டுக்கோழிகள், பிராய்லர் கோழிகள், முட்டைக்கோழிகள் (லேயர் கோழிகள்) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் நாட்டுக்கோழிகளை வீட்டிலேயே வளர்க்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick