குட்டீஸைக் கவர்ந்த மேஜிக்கல் ட்ரீட் | Readers Opinion - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

குட்டீஸைக் கவர்ந்த மேஜிக்கல் ட்ரீட்

மிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழாவா? ஆவலுடன் காத்திருக்கிறோம்.

- சுனந்தா, திருச்சி-2

தை சொல்லும் கலையில் ஃபுட் போட்டோகிராபி அண்டு ஸ்டைலிங் பற்றிய விவரங்களை சாம்பிள் படங்களுடனும் ஜூஸியான ரெசிப்பிகளுடனும் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

- சாந்தி கிருஷ்ணன், திருவனந்தபுரம்

ரும்முன் காக்கும் சூப்பர் ஃபுட்ஸ் ரெசிப்பிகளைத் தந்தது செம டேஸ்ட்.

- சுகந்தி நாராயணன், சென்னை-39

கி
ட்ஸ் மேஜிக்கல் ட்ரீட் ரெசிப்பிகள் செய்தேன். ஆசையோடு காலி செய்து விட்டார்கள் எங்கள் வீட்டுக்கு வந்த குட்டீஸ்.

- தேஜஸ்வினி, கல்பாக்கம்

ஓ... நாவல் ரெசிப்பி படங்களைப் பார்த்தே பிரமித்துப் போனேன். இந்த சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களைக் கொண்டு ரெசிப்பிகளையும் செய்து வீட்டினரின் பாராட்டையும் பெற்றேன்.

- கல்யாணி குமார், கோயம்புத்தூர்-3

ல்லா காலங்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் உருளைக்கிழங்கை மையமாக வைத்து செய்த ரெசிப்பிகள் என் குழந்தை களிடம் கொண்டாட்டத்தை வரவழைத்தது.

- ஜெகலட்சுமி ராவ், ஹைதராபாத்

ரித்திர விலாஸில் சாலட் வரலாறு சுவாரஸ்யம். அத்துடன் வாசகிகள் தந்திருந்த சாலட் பஜார் மினி ரெசிப்பிகள் சூப்பர்.

- சுசரிதா, திருச்சி-6

‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல், 044-6680 2922 என்ற எண்ணில் உங்கள் குரலிலேயே பதிவு செய்யுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க