காஷ்மீர் கிச்சன் முதல் குமரி கிச்சன் வரை பெட்டர் பட்டர்!

ந்தியப் பாரம்பர்ய சமையல் ரெசிப்பிகளை `மொபைல் ஆப்’பில் வட்டார மொழியில் வழங்குகிறது betterbutter.in இணையதளம். இதன் நிறுவனர்களில் ஒருவரும் முதன்மை இயக்குநருமான சுக்மணி பேடி, துடிப்பான இளம் பெண்.

‘` ‘பிலிப்ஸ்’ நிறுவனத்தின் சமையலறை உபகரணப் பிரிவில் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணிபுரிந்தேன். நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் பயணித்து, வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் நம் நாட்டு இல்லத்தரசிகளுடன் நெருங்கி உரையாடும் அனுபவம் கிட்டியது. நம் பெண்களுக்குச் சமையலின் மேல் இருக்கும் தீராத காதல் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குடத்திலிட்ட விளக்காக இருக்கும் அவர்கள் திறமையை வெளியுலகுக்குக் கொண்டுவரும் முயற்சியில் பிறந்ததுதான் ‘பெட்டர் பட்டர்’ இணையதளம். ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி என்று நான்கு மொழிகளில் 15 லட்சத்துக்கும் மேலான பயனாளிகளைப் பெற்றிருக் கிறது. 50 ஆயிரத்துக்கும் அதிக ரெசிப்பிகள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பல்லாயிரக்கணக்கான ரெசிப்பிகளை அளிக்கிறது ‘பெட்டர் பட்டர்’. இதோடு, மொபைல் ஆப் சேவையும் தொடங்கியிருக்கிறோம்’’ என்கிறார் சுக்மணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!