நேரத்தின் அருமை அறிந்த மைக்ரோவேவ் அவன்!

து இன்ஸ்டன்ட் ஜெனரேஷன். எல்லோருக்கும் எல்லாமுமே சீக்கிரம் வேண்டும். அதற்கேற்றவாறு காபி, சப்பாத்தி முதல் வடை வரை அனைத்துக்கும் இன்ஸ்டன்ட் பேக்குகள் கிடைக்கும் காலம் இது. `சுவை பெரிதல்ல... பசியைப் போக்கிக்கொண்டால் போதும், நேரம் மிச்சமானால் போதும்’ என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

இன்றைய சூழலில் பொருளாதாரத் தேவைக்காகக் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது என்பதால், இன்ஸ்டன்ட் கலாசாரத்துக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. இத்தகைய நிலை, மேற்கத்திய நாடுகளில் உருவானபோது அதற்கு உதவும் வகையில் அங்கே கால் பதித்த சாதனங்களில் ஒன்றுதான் மைக்ரோவேவ் அவன். 20-ம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, இன்று பல வீடுகளில் சமையலறையில் செலவிடும் நேரத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

மைக்ரோவேவ் அவன் எப்படிச் செயல்படுகிறது? இந்தச் சாதனத்தை வாங்க வேண்டுமென்றால் என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும்?

மைக்ரோவேவ் வகை அவன் மின்காந்தக் கதிர்வீச்சு (electromagnetic radiation) மூலம் உணவைச் சமைக்க உதவுகிறது. இதில் உணவை வேகவைக்க தேவையான வெப்பமானது சீராக அந்த உணவுப்பொருளின்மீது படர்கிறது. சமைக்க வேண்டிய உணவுப் பொருளை மைக்ரோவேவ் ‘அவன்’ உள்ளே வைத்துவிட்டு, பட்டன்களை அழுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தால் போதும். உணவு தேவையான பதத்துக்கு வந்தவுடன், ‘அவனே’ உங்களை அழைக்கும். சாதாரண அடுப்பில் சமைப்பதைக் காட்டிலும், மைக்ரோவேவ் அவன்களில் உணவை ஆறு மடங்கு வேகத்தில் சமைக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!