உணவு உலா | Sowcarpet Food Walk - Aval Vikatan Thadam | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

உணவு உலா

வெங்காயம் எங்கு முதலில் பயன்படுத்தப்பட்டது என்பது, இன்று வரை சர்ச்சைக்குரிய விஷயம்தான். சுமேரியா, இந்தியா, சீனா, எகிப்து என உலகின் அனைத்துப் பழம்பெரும் நாகரிகங்களிலும்,
5000 ஆண்டுகளுக்கு முன் வெங்காயம் பயன்படுத்தப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட `சரக சம்கிதம்’ என்ற சம்ஸ்கிருத மருத்துவ நூலில் எலும்பு, மூட்டு, இதயநோய்களுக்கு மருந்தாக வெங்காயம் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. இத்தாலியின் அழிந்துவிட்ட நகரமான பாம்பேய்யில் வெங்காயச் சாகுபடி பெருமளவில் செய்யப்பட்டிருக்கிறது.