ஆஹா... அல்வா!

தீபா பாலசந்தர் - படங்கள்: தே.அசோக்குமார்

ல்வாவுக்கு மயங்காதோர் உண்டா? ஆயிரம் ஆண்டு பழைமையான வரலாறுகொண்ட இந்த இனிய இனிப்பில் நம் பாரம்பர்யத்தின் சுவையும் கலந்துள்ளது. இருட்டுக்கடை முதல் இங்கிலாந்து வரை இன்று உலகெங்கும் உண்டு அல்வா.

கோதுமை அல்வா, பால் அல்வா, பாசிப்பருப்பைப் பிரதானமாகக்கொண்ட திருவையாறு அசோகா, கறுப்பும் ஜொலிக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் கீழக்கரை தொதல், திருமண விருந்துகளில் முதலிடம்பிடிக்கும் வெள்ளைப்பூசணி காசி அல்வா, முகலாயப் புகழ் மணக்கும் கேரட் அல்வா, இலங்கையில் தோன்றி, தூத்துக்குடி வழியாக நம்மை வந்தடையும் மஸ்கோத், `இத்தனை வண்ணங்களில் விதவிதமான அல்வாக்களா’ என வியக்கவைக்கும் கோழிக்கோடு வகைகள் என ரசித்து ருசித்துச் சாப்பிட எத்தனை எத்தனை அல்வாக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்