சாக்லேட்டைக் காப்பாத்துங்க மக்களே!

ர.சீனிவாசன்

ந்தப் பழுப்புநிறப் பொருள் எந்த விதத்தில் இருந்தாலும் ஒருவித போதை தரும். நம் சுவை நரம்புகளைத் தாளம் போடவைக்கும். திடப்பொருளாக இருந்தாலும் சரி, திரவமாகவே இருந்தாலும்  சரி... அள்ளியெடுத்து உண்ணலாம். தூசுப் படலம் என்றால் நுகர்ந்து பார்க்கலாம். அப்போதுகூட அது உசுப்பிவிடும் உணர்வுகள் அதை உண்பதற்கு நிகரானது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்... இந்தப் பழமொழி கறுப்பு யானைக்கு அடுத்து பொருந்திப்போவது இந்தப் பழுப்பு அரக்கனுக்குத்தான். அதன் பெயர் சாக்லேட்.

எந்த நிலையில் இருந்தாலும் சாக்லேட் ‘ஹீரோ’தான். கொஞ்சமே கொஞ்சம் கசப்பு. அதிகம் இனிப்பு. இதுதான் இதன் வெற்றியின் ரகசியம். ஒரு சாக்லேட் துண்டின் பிறப்பு முதல் காட்சிப்படுத்தப்படும் வரையிலான அதன் பயணம் என்பது அறிவியல், கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. இதை கோகோ விதைகளாக அறுவடை செய்து சாக்லேட்டாக மாற்ற உதவுவது அறிவியல் என்றால் அதை விதம்விதமாக உருமாற்றி, சுவையேற்றி, மெருகேற்றி நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பது கலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்