சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

மழை மற்றும் குளிர்காலங்களில் அப்பளத்தை எப்படிப் பாதுகாப்பது? சுடுவது, பொரிப்பது எப்படி?

அப்பளம் ஈரமாயிருந்தால் முதலில் அதை இளம்வெயிலில் உலர்த்தி, டப்பாவில் போட்டுவைக்கவும். அப்பளத்தை உடைத்துப்பார்த்து, உடையாவிட்டால், மேலும் வெயிலில் வைத்து உலர்த்த வேண்டும்.

அப்பளத்தைப் பொரிக்கும் முன்பாக அதன்மீது உள்ள மாவைத் துடைத்துவிட்டு எண்ணெயில் போடவும். இல்லையெனில், எண்ணெய் கறுத்து வீணாகிவிடும்.

அப்பளத்தைச் சுடும்போது தோசைக் கல்லை அடுப்பில் போட்டுக் காய்ந்ததும் அப்பளத்தைப்போட்டு ஒரு சுத்தமான துணியைச் சுருட்டிக்கொண்டு அப்பளத்தை ஒத்தி ஒத்தி எடுங்கள். இரண்டுபுறமும் இப்படியே செய்தால் கருகாமல் சுட்ட அப்பளம் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick