எண்ணெய் கம்மி... ஆனால், அதே ருசி... ஏர் ஃப்ரையர் மேஜிக்!

ங்கள் வீட்டின் மேசை மேல் இரண்டு தட்டுகளை வைக்கிறீர்கள். உருளைக் கிழங்குதான் இரண்டிலும். ஒன்றில் அது பொரித்துத் தங்க நிறத்தில் பிரெஞ்சு ஃப்ரையாக இருக்கிறது. மற்றொன்றில் வழக்கமான பொரியலாக இருக்கிறது. இதில் எது வேண்டும் என நீங்கள் கேட்கும்முன், பிரெஞ்சு ஃப்ரைஸ் நொறுங்கும் சத்தம் உங்களின் காதுகளுக்கு எட்டியிருக்கும்!

வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் நிச்சயம் அதில் கை வைத்திருப்பார்கள். ஆம், பொரித்த உணவால் கொழுப்பு கூடும் என்றாலும், நம் சுவை நரம்புகளைத் தாளம்போட வைக்கும் அதன் மொறுமொறுப்பான இழை நயம், ஆரோக்கியத்தை மறக்கடிக்கும். எண்ணெயில் குளிக்கும் இவ்வகை செய்முறை இல்லாமல், மிகவும் குறைவான அளவு எண்ணெயுடன் அதே பொரித்த சுவையைக் கொண்டுவர ஒரு வழி இருக்கிறது என்றால்..? இந்த வரியைக்கூட முழுமையாகப் படிக்காமல், அது என்னவென்று அறிய அடுத்த பத்திக்குச் சென்றிருப்பீர்கள்! சூடான வெப்பக்காற்று அந்தப் பச்சையான உணவுப் பொருளின் மேல் போர்வை போலப் படர்கிறது. குறைவான அளவு எண்ணெய் கொண்டு ஒப்பனை செய்யப்பட்டிருந்த அந்த உணவுப் பொருளின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick