சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சாலட்

ட்டவட்டமாக வெட்டிய கேரட், சின்னச் சின்னதாக நறுக்கிய பீன்ஸ், வெட்டி வைத்த வெங்காயம், அரிந்து வைத்த முட்டைகோஸ் இவற்றை வேகவைத்து, தேங்காய், மிளகாய் அரைத்துக் கொட்டித் தாளித்தால் `கூட்டு’; அரைத்துவிடாமல் காய்கறிகளை மட்டும் எண்ணெய் சேர்த்து வதக்கினால் `பொரியல்’; வேகவும் வைக்காமல் வதக்கவும் செய்யாமல் அப்படியே பச்சையாக ஒரு கிண்ணத்தில் அடுக்கி, மேலே கொஞ்சம் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் தூவி கலந்து வைத்தால் `சாலட்’. தமிழ்ப்படுத்தினால் `காய்கறிக் கலவை’ அல்லது `பழக் கலவை’ அல்லது `காய்கறி பழக் கலவை.’

பொதுவாக காய்கறித் துண்டுகளையோ, பழத்துண்டுகளையோ, இரண்டையும் கலந்தோ சமைக்காமல் உண்பதைத்தான் `சாலட்’ என்கிறோம். இது ஆரோக்கியமானது. கொழுப்புச் சத்து குறைவானது. இதற்கு எதிர்மாறாகச் சமைத்த இறைச்சியும் அதிக கலோரிகொண்ட உணவுப் பொருள்களும் கலக்கப்பட்ட சாலட் வகையறாக்களும் இருக்கின்றன. இருவித சாலட்களுமே உலகப் பொது உணவுதான். சாலட்டுக்கு மிக மிகப் பழைமையான வரலாறும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick