சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

கோடையில் புதிதாக வற்றல், வடாம் போட ஆரம்பித்துவிடுவோம். சென்ற ஆண்டில் மீந்த, தூளான, நொறுங்கிய வடாம்களை என்ன செய்வது?

தூளான, நொறுங்கிய வடாம்களைத் தேவையான அளவு எடுத்து ஒரு தட்டில் போட்டு அது மூழ்கும் அளவு கைபொறுக்கும் சூட்டில் வெந்நீரை ஊற்றிவைக்கவும். இடையிடையே நன்கு கிளறிவிடவும். அரை மணி நேரம் கழிந்த பின் வடாம் நீரில் ஊறி மென்மையாகிவிடும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, இதனுடன் ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் போட்டு வதக்கவும்.

பிறகு, ஊறிய வடாம்களைச் சேர்த்து வதக்கி, ஈரம் வற்றியதும் 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான தூள் வடகப் பொரியல் தயார். இது சாம்பார், ரசம், மோர் சாதங்களுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick