சரித்திர விலாஸ் இன்றைய மெனு சட்னி

முகில் - படங்கள்: லக்ஷ்மி வெங்கடேஷ்

ட்னி என்றாலே, சட்டென நம் நினைவுக்குவருவது வெள்ளை நிற தேங்காய்ச் சட்னிதான். தேங்காய், நான்கைந்து மிளகாய், கொஞ்சம் உப்பு, புளி சேர்த்துத் தண்ணீர்விட்டு அரைத்தால், தேங்காய்ச் சட்னி ரெடி. தேங்காய், பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் இருப்பது. உப்பும் ஆதி பண்டம்தான். இந்தப் புளியின் பூர்விகம் ஆப்பிரிக்கா. இது, கிறிஸ்து பிறந்த பிறகே தெற்காசிய நாடுகளில் பரவியது. அடுத்தது மிளகாய். இது, 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர் இந்தியாவுக்குக் கொண்டுவந்தது. ஆக, நாம் அறிந்த `தேங்காய்ச் சட்னி’ என்பது பிற்காலத்திலேயே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், சட்னியானது மக்களின் முக்கியமான உணவாக ஆதி காலத்திலிருந்தே இருந்துவருகிறது. எனில், சட்னியின் பண்டைய வடிவம் என்ன? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick