ஆந்திரா ஆச்சர்யம்! | Andhra recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

ஆந்திரா ஆச்சர்யம்!

லஷ்மி வெங்கடேஷ்

``ஆந்திரப் பிரதேசம் என்றதும் காரசார உணவுகளே நம் நினைவுக்கு வரும். பிரபலமான பிரியாணி மட்டுமல்ல... ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இன்னும் ஏராளமான சிறப்பு உணவுகள் உண்டு. அதிலும், குறிப்பாக ஸ்டீரிட் ஃபுட் வகைகளில் இனிமையும் புதுமையும் நிறைந்திருக்கும். ஆந்திராவில் அறிமுகமான இரானி டீ, மினி சமோசா, உஸ்மானியா பிஸ்கட் போன்றவை இன்று உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி புகழ் சேர்க்கின்றன. கூடவே, பக்கோடாவும் உண்டு. இட்லி, தோசை வகைகளில்கூட  இவ்வளவு வித்தியாசம் காட்டமுடியும் என்பது ஆந்திர ஆச்சர்யம்தான்.