இலை... இயற்கை... இன்சுவை! | Hotel Review Thattu Idly - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

இலை... இயற்கை... இன்சுவை!

வார இறுதி நாள். மாலை நேரம். போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருந்த அவ்வை சண்முகம் சாலை. கடற்கரைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் ஆடம்பரம் ஏதுமின்றி அழகாகக் காட்சியளிக்கிறது ஓர் எளிய உணவகம். `இரட்டை இலை’ கட்சி அலுவலகம் இருக்கும் அதே சாலையில், அதற்கு அருகிலேயே இருக்கிறது இந்த ‘இலை’. இது சுத்த சைவக் கடை. வெயிலுக்கு இதமான ரோஸ் மில்க்குடன் ஆரம்பித்தோம், `இலை’ விருந்தை.