கிரேட் செலக்‌ஷன்ஸ்!

மிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழாவின் அறிவிப்பே அசத்திவிட்டது. தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களின் பட்டியலில், நான் குடும்பத்தினருடன் சாப்பிட்ட உணவகங்களும் இருந்தது ஆச்சர்யம். ரியலி கிரேட் செலக்‌ஷன்ஸ்.

- சுவேதா கிருஷ்ணன், சென்னை-91

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்யலாம் என்று குழப்பத்திலிருந்த என்னை, சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமாரின் ஆல் நியூ மோதகம் மற்றும் கொழுக்கட்டை ரெசிப்பிகள் மகிழ்வித்துவிட்டது.

- எஸ்.திக்‌ஷிதா, காட்டுமன்னார்கோவில்

மக்குப் பிடிக்காத காய்கறிகளைக்கூட அழகாக ஸ்டஃபிங் செய்துகொடுத்தால் விரும்பிச் சாப்பிட்டுவிடுவோம் என்பது நிஜம். சுதா செல்வகுமாரின் ரெசிப்பிகள் அனைத்தும் ஜமாய் ரகம்!

- மைதிலி கதிரேசன், கும்பகோணம்.

ன்று பலரின் விருப்ப உணவாக இருக்கும் பிரியாணிக்குப் பின் இவ்வளவு பெரிய வரலாறா? சரித்திர விலாஸை எழுதிவரும் முகில், ‘சிறந்த உணவு எழுத்தாளர்’ என்று அவள் விகடன் கிச்சன் அளித்த விருதுக்கு மிகவும் தகுதியானவர்.

- சாந்தினி சுரேஷ், கோயம்புத்தூர்-3

டைகளில் விற்பனைக்கு இருக்கும் அவகாடோ பழங்களைப் பார்த்துவிட்டு மட்டும் போகும் என்னை, லக்ஷ்மி வெங்கடேஷின் ஸ்பெஷல் ரெசிப்பிகள் வாங்க வைத்துவிட்டது.

- சுந்தரி ஜகந்நாதன், ஈரோடு.

ணையத்தில் கலக்கும் ‘வில்லேஜ் டாடி’யை கட்டுரை மூலம் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். அவள் விகடன் கிச்சன் விருது பெற்ற ஆறுமுகத்துக்கு வாழ்த்துகள்.

- பா.அலமேலு, சென்னை-12

‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல், 044-6680 2922 என்ற எண்ணில் உங்கள் குரலிலேயே பதிவு செய்யுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!