சீக்கிரம் சாப்பிடுங்க... இல்லைன்னா காணாமப்போயிடும்!

ங்கே கிடைக்கும் அத்தனை உணவு வகைகளும் இந்திய உணவு வகைகள்தாம். ஆனால், தயார் செய்யும் முறை முற்றிலும் புதிது. `மாலிக்கியூலர் கேஸ்ட்ரொனமி (Molecular Gastronomy)’ எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் உணவு வகைகளைத் தயார்செய்து அசத்திக்கொண்டிருக்கிறது சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள `ஸ்பைஸ் கிளப் (Spice Klub)’ உணவகம்.

பெயருக்கு ஏற்றாற்போல, உணவக நுழைவாயிலிலேயே மிளகாய், மிளகு, கிராம்பு, அன்னாசிப்பூ போன்ற முக்கியமான மசாலா பொருள்களின் பெரும் உருவத்தை பெரிய கார்டு போர்டில் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கிவைத்திருந்த விதம், அழகு! உள்ளே நுழைந்தவுடன் வெயிலுக்கு இதமாக `குளிர்பானம் ஏதாவது இருக்குமா?’ என மெனு கார்டில் தேடியபோது கண்களில் தென்பட்டது `மேங்கோ ஆன் தி ராக்ஸ்’. ஆர்டர் செய்துவிட்டு உணவகத்தின் சுற்றுப் புறத்தை நோட்டமிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!