ஆச்சர்ய சுவை!

ஓணம் விருந்தை அட்டகாசமாகப் பரிமாறியிருந்தார் அகிலா விமல். ஸத்யா பரிமாறும் முறையைப் படத்துடன் விளக்கியிருந்தது அருமை.

- தேவசேனா, சென்னை-90

மைக்ரோவேவ் அவன் பயன்களை மட்டுமல்லாமல், அதைச் சரியான விதத்தில் பயன்படுத்தும் முறையையும் அதற்கான ரெசிப்பிகளை செளபர்னிகா சொல்லியிருப்பதும் பயனுள்ளது.

- செண்பகாஸ்ரீ, மதுரை-20

ப்ரியா சதீஷின் `ஹாட் & ஜில் காஷ்மீர்’ ரெசிப்பிகள் மனதுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

- திக்‌ஷிதா, பொன்னேரி

குட்டீஸ் விரும்பும் ஸ்பெஷல் ரெசிப்பிகளான ரோல் ரெசிப்பிகளை இனி பெரியவர்களும் விரும்பி உண்ணும்படி செய்துள்ளார் சுதா செல்வகுமார்.

- அவந்திகா, பெங்களூரு-3

காப்பர் சிம்னியின் உணவுவகைகள் அனைத்தும் ஆச்சர்ய சுவைதான்.

- கருண்யா, புதுக்கோட்டை

லஞ்ச் பாக்ஸில் மட்டுமல்ல... விருந்தினர்களின் வருகையின்போதும் மீனா சுதிரின் ரெசிப்பிகள் இடம்பெற்றுவிடும்.

- காயத்ரிதேவி, திருச்சி-20

சாதாரணமாக நினைக்கும் பிஸ்கட்டுக்குப் பின்பு இவ்வளவு பெரிய வரலாறா? வாவ்!

- பாக்கியலட்சுமி, காரைக்கால்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick