சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - முகலாய உணவுகள் | Mughlai Food Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - முகலாய உணவுகள்

பாரசீக உணவு கலாசாரமும், இந்திய உணவு கலாசாரமும் ஒன்றுடன் ஒன்று கலந்து, பின்னிப் பிணைந்து, வதங்கி, பொரிந்து, கமகமவென உருவானதே முகலாய உணவு கலாசாரம். இவற்றை இந்திய உணவு என்றும் சொல்லக் கூடாது. பாரசீக உணவு என்றும் பிரித்தாலும் ஆகாது. இவை தனித்துவமானவை. தனிப்பட்ட சுவை கொண்டவை. பிரத்யேகமான சமையல் முறை கொண்டவை. அனுபவஸ்தர்களால் மட்டுமே முகலாய பாணி உணவுகளை அதன் பாரம்பர்யமும் சுவையும் மாறாமல் சமைக்க முடியும். இந்தப் பாணி உணவுகளைச் சமைக்க அதிக நேரம் பிடிக்கும். பொறுமை மிக அவசியம்.

ஆம், முகலாய உணவுகளைச் சமைப்பது என்பது தனிப்பெருங்கலைதான். முதல் முகலாயப் பேரரசரான பாபருக்கு இந்திய உணவுகள் எதுவுமே பிடிக்கவில்லை. பாரசீகத்தில் கிடைத்தவை எல்லாம் இங்கே அவருக்குக் கிட்டவில்லை. ‘இங்கே திராட்சைகள் இல்லை. முலாம் பழங்கள் இல்லை. வேறு சுவையான பழங்கள் இல்லை. உலர் பழங்களும் இல்லை. ரொட்டிகள் இல்லை. குடிப்பதற்குக் குளிர்நீர்கூட இல்லையே!’ என்றுதான் புலம்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க