நியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பி!

ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா

அவகாடோ பேசில் பாஸ்தா

தேவையானவை:


பென்னே பாஸ்தா - 2 கப்

அவகாடோ (நடுத்தரமாகப் பழுத்தது) - ஒன்று

பூண்டு - 2 பல்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் 

புதினா அல்லது பேசில் இலைகள் - 10-12

தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:


5 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து பாஸ்தா சேர்த்து, மென்று சாப்பிடும் பதத்தில் வேகவிடவும். பாஸ்தாவை வடிகட்டி, நீரை தனியே எடுத்து வைக்கவும். பூண்டு, ஆலிவ் ஆயில், உப்பு, மிளகை மிக்ஸியில் சேர்த்து சில விநாடிகள் அரைக்கவும். இதனுடன் புதினா (அ) பேசில் இலைகள், அவகாடோ பழக்கூழ், எலுமிச்சைச் சாறு சேர்த்து நைஸாக அரைக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்).

வேகவைத்த பாஸ்தாவுடன் அவகாடோ கலவையைச் சேர்த்து, ஃபோர்க் கொண்டு புரட்டவும். இதனுடன் விருப்பமான கெட்டிப் பதத்துக்கேற்ப தேவையான அளவு பாஸ்தா வேகவைத்த நீரைச் சேர்த்துக் கலக்கவும்.

இதை அப்படியே பரிமாறலாம்; துருவிய சீஸ் சேர்த்தும் பரிமாறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick