உணவு உலா: பானி பூரி தோன்றிய கதை தெரியுமா? | World traditional Foods - Shankar Chat Bhandar in Anna nagar - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

உணவு உலா: பானி பூரி தோன்றிய கதை தெரியுமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

படங்கள்: லெய்னா

காபாரதக் கதைகளில் வெகு சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கதை களில் ஒன்று, பானி பூரி உருவான கதை.

பஞ்ச பாண்டவரை மணந்துகொண்டு மாமியார் வீட்டுக்கு வருகிறாள் திரௌபதி. மருமகள் எளிய வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறாளா, இருப்பதைக் கொண்டு அவளால் ஐவருக்கும் உணவளித்து, கவனித்துக்கொள்ள முடியுமா என குந்திதேவிக்கு ஐயம் ஏற்படுகிறது. மீந்துபோன `சப்ஜி’ கொஞ்சமும், ஒரு பூரிக்கான மாவையும் திரௌபதியிடம் தந்து, ஐந்து மகன்களுக் கும் உணவு செய்து தரச் சொல்கிறாள்.

சிறிய பூரிகளாக மாவை இட்டு, அதனுள் மீந்த சப்ஜியை வைத்து, புளிக்கரைசல், மிளகாய்க் கரைசல் ஊற்றி ஐந்து பேருக்குப் பரிமாறி அசத்திவிட்டாள் திரௌபதி. காலம் உள்ளவரை தன் மருமகள் செய்து அசத்திய பானி பூரி இருக்கும் என்று ஆசீர்வதித்தாள் குந்தி என்று சொல்லப்படுவதுண்டு.

உண்மையில் அன்றைய கங்கைக் கரையில் உள்ள மகத நாட்டில் தோன்றியது பானி பூரி. அங்கிருந்து மத்தியப்பிரதேசம், வங்காளம், டெல்லி எனப் பல இடங்களுக்குக் குடி புகுந்தது.

அதிகம் படித்தவை