மேலூர் பக்கம் போனால் மறவாதீர்! | Vaira Vilas Military Hotel in Melur - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

மேலூர் பக்கம் போனால் மறவாதீர்!

பெரும்பாலான நாடுகளில் ஆட்டிறைச்சி பிரதான அசைவ உணவாக இருக்கிறது.  ஆனால், உலகில் வேறெங்கும் நம்மளவுக்கு அதில் வகை வகையாக உணவு சமைப்பவர்கள் யாருமில்லை. முந்திரி அரைத்து ஊற்றி, தேங்காய் அரைத்து ஊற்றி, கொத்தமல்லி - கறிவேப்பிலை அரைத்துப்போட்டு எனக் குழம்பிலேயே ஏராளம் சித்துவேலைகள் செய்வார்கள் நம் அம்மாக்கள்!

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங் களில் நடக்கும் மொய் விருந்துகளில் போடப்படும் மட்டன் குழம்புக்கு இணை சொல்ல எதுவுமில்லை. எந்தச் சமையற்காரர் சமைத்தாலும் எப்படித்தான் அந்த ஒற்றைச் சுவையைக் கொண்டுவருகிறார்களோ தெரியவில்லை. குழம்பு மணம் நாள் முழுக்கவும் கையில் தங்கியிருக்கும். ஆனி தொடங்கி ஆவணி வரை மூன்று மாதங்கள் தினமும் அந்தப்பகுதியில் கறிக்குழம்பு மணக்கும். அந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுவதற்கு தள்ளுமுள்ளு, அடிதடியெல்லாம் நடக்கும்.

பவுடர்களாக மசாலாக்களை அள்ளித்தூவி வைக்கும் குழம்பைவிட, எல்லாவற்றையும் சேகரித்து அரைத்து ஊற்றிவைக்கும் குழம்புக்கு சுவையும் மணமும் அதிகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க