கிச்சன் கைடு! | Kitchen guide and Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

கிச்சன் கைடு!

* பூசணியைச் சமைக்கும்போது விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியைத் தூக்கி எறிந்துவிடாமல், அதை தோசைக்கு அரைக்கும் மாவோடு சேர்த்து அரைத்தால், மிருதுவான தோசை கிடைக்கும்.

* முருங்கைக்கீரையைச் சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைத்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

* கரைத்த பஜ்ஜி மாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் மிருதுவாக உப்பி வரும்.

* கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மையாக அரைத்து பிரெட் ஸ்லைஸில் ஒருபுறம் தடவி, நெய்விட்டு டோஸ்ட் செய்தால் தனிச்சுவையைத் தரும்.

* சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்யும்போது ஒரு டீஸ்பூன் ரவையைச் சேர்த்து ரோஸ்ட் செய்தால் மொறுமொறுவென்று இருப்பதுடன் கிழங்கும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

* கூட்டுக்கு உளுந்து தாளிப்பதைவிட, வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க