வைகாசி பிரசாதங்கள்! | Vaikasi month Prasadham Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

வைகாசி பிரசாதங்கள்!

ந்திய நாட்டின் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக பண்டிகைகள் விளங்குகின்றன. பண்டிகைகள் இல்லாத மாதங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாக் கடவுளுக்கும் பண்டிகைகள் இருக்கின்றன. பண்டிகைகளின் சிறப்பே விதவிதமான உணவுப் படையல்கள்தானே? கடவுளுக்குப் படைத்த கையோடு, அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதால் உணவுகள் `பிரசாதம்’ என்கிற பெருமையை அடைகின்றன.

மக்களை மகிழ்வித்து ஒற்றுமையாக்கும் இந்த பிரசாதங்கள் சீஸனுக்குத் தகுந்த வகையில் உடல்நலனைப் பேணும் மருந்தாகவும் அமைவது சிறப்பிலும் சிறப்பானது. கடுமையான கோடைக்காலமான இந்த வைகாசி மாதத்தில் கடவுளுக்குப் படைக்கும் பிரசாதங்கள் பெரும்பாலும் குளிர்ச்சியைக் கொடுப்பவையாகவே இருக்கும்.