சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம் | Traditional food - Mango - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு மாம்பழம்

மாம்பழத்தை உலகின் ஆதி கனி எனலாம். அதாவது, இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே மாமரங்கள் இருந்ததற்கான படிமங்கள் கிடைத்திருக்கின்றன. அதுவும் இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்கள், மியான்மர், பங்களாதேஷ் போன்ற பகுதிகள் மாமரங்களின் பிறப்பிடமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்தப் பகுதிகளிலிருந்துதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் காலப்போக்கில் மா பரவியிருக்கிறது.

பொதுவாக ஒரு தாவரம் ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்துக்குப் பரவுதல் எப்படி நிகழும்? தாவர விதைகள் காற்றில் பரவும். அல்லது பழத்தோடு விதைகளை உண்ணும் பறவைகள், வேறு இடங்களுக்குச் சென்று போடும் எச்சங்களால் பரவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க