கடவுள் அமைத்து வைத்த மேடை!

கச்சேரி

 தினைந்து ஆண்டுகளுக்கு முன் வரை கல்யாணங்களில் இசைக் கச்சேரி என்பது அரிதினும் அரிது. பெரும் பணம் படைத்தவர்களின் இல்லத் திருமணங்களில் மட்டும்தான் அதெல்லாம் இடம்பெறும். இப்போது நிலைமையே வேறு. நடுத்தர வர்க்கம், அதற்கும் கீழ்... என கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரின் திருமணங்களிலும் பெரும்பாலும் இடம்பிடித்து விடுகிறது... ஆர்க்கெஸ்ட்ரா! திருமணத் தேதியை முடிவு செய்து மண்டபத்துக்கு முன்பணம் கொடுத்த கையோடு, இசைக் குழுவையும் ஒப்பந்தம் செய்துவிடுகிறார்கள்.

பொதுவாக, வட இந்தியாவில்தான் இத்தகைய 'மியூஸிக்கல் திருமணங்கள்’ அதிகம். குறிப்பாக மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் கல்யாணத்தின்போது செமரகளையாக கச்சேரி களைகட்டும்! இதுவே தென் இந்தியாவுக்கு வந்துவிட்டால்... ஆந்திரா, கர்நாடகாவில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அதேசமயம், தமிழகத்தில் வீட்டுக்கு வீடு எனும் அளவுக்கு கிராமப்புறங்களில் நடக்கும் திருமணங்களில்கூட இப்போ தெல்லாம் பாட்டுக் கச்சேரி பட்டையைக் கிளப்புகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick