எந்த தலைக்கு... என்ன ஸ்டைல்?

ஹேர் ஸ்டைல்

திருமணநாளன்று மணப்பெண் சிகையலங்காரம் எப்படி இருக்கலாம், எதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும், முகூர்த்தத்துக்குப் பின் வரும் நாட்களில் கேசத்துக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் என்ன என்பது பற்றி கூறுகிறார், அடையார் 'மாய ரூபா பியூட்டி கேர்’ பியூட்டி பார்லரின் உரிமையாளர் வித்யா மைதிலி.

''பொதுவாக, முகூர்த்தத்துக்கான சிகை அலங்காரம் என்பது, அன்று முடிவெடுக்கிற விஷயம் அல்ல. குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்பாவது கேசத்துக்கான பராமரிப்பை பார்லர் சென்றோ, சுயமாகவோ ஆரம்பித்துவிட வேண்டும். சீரான இடைவெளியில் ஆயில் மசாஜ், இளநரை உள்ளவர்களுக்கு மெஹந்தி, கலரிங் செய்வது, சுருட்டை முடி உள்ளவர்களுக்கு கேசத்தை 'ஸ்ட்ரெயிட்டனிங்’ மூலம் நீட்டுவது, முன் நெற்றியில் குறைந்தமுடியே உள்ளவர்களுக்கு ஸ்பா மற்றும் லேசர் சிகிச்சைகள், கேசத்தை க்ளோஸ் கட் செய்திருப்பவர்களுக்கு சவுரி செட் செய்வது என ஒரு மணப்பெண், முகூர்த்த சிகையலங்காரத்துக்கு முன்கூட்டியே தயாராவது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick