வெடிங் கலெக்ஷன்ஸ்!

வெடிங் சாரி

 'கல்யாண சேலை... உனதாகும் நாளை...'  - நாள் குறித்துவிட்டாலே, பலருடைய உதடுகளும் இப்படி முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். பின்னே, ஆயிரம் காலத்துப் பயிரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப நிமிடங்களில் அணியப்போகும் சேலையாயிற்றே!

சொந்தம் - பந்தம்... ஊர் - உறவுக்கு என்று துணிமணிகளை எடுத்து முடிக்க வேண்டிய வேலைகள் ஒருபக்கம் மிரட்டினாலும்... மணப்பெண்ணுக்கான சேலை தேர்வு என்பதுதானே மகாமிரட்டல்! இதற்காகவே வண்டி கட்டிக் கொண்டு காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி என்று ஓடிய காலங்களையெல்லாம் கடந்து... இன்றைக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே அத்தனையும் கிடைக்கின்றன. என்றாலும்... 'செலக்ஷன்' என்பதில் எந்த மாறுதலும் இல்லைதானே! தேடிப்பிடித்து செலக்ஷன் செய்வதற்குள்... 'அப்பப்பா' என்றாகிவிடும் பெரும்பாலும்! அந்த பாரத்தை பாதியாகக் குறைக்க, இங்கே அழகிய புடவை கலெக்ஷன்களை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். இங்கே 'ச்சூஸ்' பண்ணுங்க.... கடையில் 'கலெக்ட்' பண்ணுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick