மங்கலம் முழங்குது... புதுவசந்தம் பொங்குது!

கெட்டிமேளம்

டிரம்ஸ் வாத்தியங்கள் அதிர்வது... திரைப்பட இசைக் கச்சேரிகள் கலகலப்பூட்டுவது... என்று இன்றைய திருமணங்கள் படாடோபம் மிக்கவையாக மாறிவிட்டன. இப்படி என்னதான் செலவு செய்து, விதம்விதமான ஏற்பாடுகள் செய்தாலும், அத்தனை பேருமே தவிர்க்காமல் முதலிடம் கொடுப்பது... 'மங்கல வாத்தியம்' எனப்படும் நாதஸ்வரம் மற்றும் மேளம் ஆகியவற்றுக்குத்தான். ஆம்... தாலி கட்டும் நேரத்தில் மேளமும், நாதஸ்வரமும் இணைந்த 'கெட்டிமேளம்' ஒலிப்பது தமிழகத்தில் மட்டுமல்ல... தென்மாநிலம் முழுக்கவே தொன்று தொட்டு தொடர்கிறது!

வீட்டில் நடக்கும் மஞ்சள்நீர் சடங்கு, வளைகாப்பு, காதணி விழா, நிச்சயதார்த்தம், உபநயனம் என்று அனைத்து சுபநிகழ்ச்சிகளிலுமே மங்கல வாத்தியங்கள் இடம்பெறுகின்றன. 'மேளம்' என்கிற தவில், 'நாதஸ்வரம்' என்கிற நாகஸ்வரம், சுதிப்பெட்டி, தாளம் ஆகிய நான்கு இசைக்கருவிகளும் சேர்ந்த கலவைதான் 'மங்கல வாத்தியம்' என்று அழைக்கப்படுகிறது. மக்கள் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட இந்த மங்கல வாத்தியம் எப்போதிலிருந்து மக்களின் புழக்கத்தில் வந்தது... எப்படி வந்தது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick