இது ஐயாயிரம் கல்யாண ஆலயம்!

கோயில்

திருமணத் தலங்கள் என்று பெயர்பெற்ற ஆலயங்கள் பல. அவற்றில் முக்கியமானது, வடபழனி முருகன் கோயில்! பழனி தண்டாயுதபாணியின் ஒரு படத்தை வைத்து, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூரை வேய்ந்த குடிசையில் உருவானதுதான்... இன்று சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி ஆலயம். முருகப்பெருமானின் இந்த ஆலயத்தில் சென்னைவாசிகள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் பிள்ளைகளின் திருமணங்களை நடத்துவதால், இங்கு ஆண்டுக்கு சுமார் ஐயாயிரம் திருமணங்கள் நடக்கின்றன என்பது அருள் ஆச்சர்யம்!

நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது ஆலயம். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகிலிருப்பதால்... வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆலயத்தைச் சுற்றியே திருமணத்துக்குத் தேவையான அத்தனை பொருட்களுக்கும் நடை தொலைவில் கிடைத்துவிடுகின்றன. திருமணம் முடிந்த பின் காலை, மதிய உணவுகளுக்கும் தயாராக இருக்கின்றன பல உணவுக் கூடங்கள் ஆலயத்தின் அருகிலேயே, அவரவரின் வசதிக்கேற்ற விலையில். நவீன குளியலறைகள், கழிப்பறைகள், பொருட்களைப் பாதுகாக்கவும், சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் ஆலயத்தையொட்டி பல இடங்கள், அழகான திருக்குளம், அதையொட்டி கடை வீதிகள் என்று அத்தனை வசதிகளும் இருப்பதும் இங்கே ஆயிரக்கணக்கில் திருமணங்கள் நடக்கக் காரணமாக இருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick