ஸ்டைல்... ஸ்டைல்!

ஃபேஷன் ஜுவல்ஸ்

திருமணத்துக்கு தங்க நகைகளை கிலோ கணக்கில் வாங்கினாலும், வரவேற்பு... நலங்கு... தாலிகட்டும் நேரம்... இப்படி ஒவ்வொரு சடங்குக்கும் புடவைகளுக்கு மேட்சாக, கண்கவரும் விதத்தில் கவரிங் ஃபேஷன் நகைகளை அணிவது கட்டாயமாகவே இருக்கிறது. இத்தகைய நகைகளை பெரும்பாலும் வாடகைக்கு வாங்கி அணிவதுதான் வழக்கமாக இருக்கிறது. அதேசமயம், 'வாடகை யாக நீங்கள் கொடுக்கும் காசுக்கு, அந்த நகைகளை சொந்தமாகவே ஆக்கிக் கொள்ள முடியும்' என்றபடி தற்போது அவற்றையும் குறைந்த விலைகளில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இத்தகைய பிரத்யேக ஃபேஷன் நகை களின் விற்பனையில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் நிபுணா ஃபேஷன்.

''இந்தக் காலத்து பெண்கள் அனைத்து விஷயத்தையும் புதுமையாகவே பார்க்கிறார்கள். தங்க நகைகளைவிட, இந்த ஃபேஷன் நகைகளைப் பொறுத்த வரை அவர்களின் தேர்வு ரொம்பவே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அதாவது, கடைசி வரை மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து, முழு திருப்தி வந்ததால்தான் நகர்கிறார்கள். அதேபோல ஒரு முறை போட்ட நகையை மறுமுறை அணியத் தயங்குகிறார்கள். அதிலும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் என்றால்... 'யூஸ் அண்ட் த்ரோ' என்பதுதான் அவர்களுடைய ஸ்டைலே!'' என்று லேட்டஸ்ட் ஃபேஷன் பற்றி சிலாகித்து பேசும் 'நிபுணா'வின் பொதுமேலாளர் தியாகராஜன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick