அசத்தல் அழைப்பிழ்கள்!

ஓலைச்சுவடி முதல் புதையல் பெட்டி வரை... வெடிங் கார்ட்ஸ்

லைச்சுவடியில் ஆரம்பித்து, பிற்காலத்தில் மஞ்சள் தடவிய வெள்ளைத் தாளில் எழுதப்பட்டு, சற்றே மேம்பட்டு அழுத்தமான அட்டைக்கு மாறிய திருமண அழைப்பிதழ்கள்... இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தைத் தொட்டுள்ளன. ஆம், மஞ்சள் நிற காகிதத்தில் மட்டுமே நீண்ட காலமாக தயாராகிக் கொண்டிருந்த அழைப்பிதழ்கள், கிட்டத்தட்ட விடைபெற்றுவிட்டன.

மணமகன், மணமகள், குடும்பத்தார் என்று ஒவ்வொருவருடைய ரசனையையும் பூர்த்தி செய்யும் வகையில்... ஏகப்பட்ட மாடல்களில் தற்போது அழைப்பிதழ்கள் தயாரிக்கப்படுகின்றன. பட்டுப்புடவை, பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றுக்கும் ஷோரூம்கள் இருப்பது போலவே, தற்போது சின்னச் சின்ன நகரங்களில் கூட அழைப்பிதழ்களுக்கென்றே பிரத்யேக ஷோரூம்களும்... முண்டியடிக்கும் கூட்டமும்... ஆச்சர்யத்தைக் கூட்டுகின்றன!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick