பூ மழை தூவி ..!

பேண்டு வாத்தியம்

'நினைத்தை முடிப்பவன்' படத்தில், பேண்டு வாத்திய கலைஞராக வந்து, கல்யாண ஊர்வலம் ஒன்றில் எம்.ஜி.ஆர். பாடும்... 'பூ மழை தூவி... வசந்தங்கள் வாழ்த்த' என்ற பாடல், இன்றைக்கும் கிராமப்புற கல்யாணங்களில் தவறாமல் இடம்பெறும் பாடலாக இருக்கிறது. ஏன்... நகர்ப்புற கல்யாணங்களின் ஆர்க்கெஸ்ட்ராக்கள்கூட அதை தவறாமல் இசைக்கின்றன. அத்தகைய பேண்டு வாத்தியம், இன்றைக்கு நாதஸ்வரத்துக்கு இணையாக நகர்ப்புற கல்யாணங்களில் கட்டாயமாக இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது! நிகழ்ச்சி நடக்கும் பகுதி முழுக்க ஓங்கி ஒலித்து, காதைக் கிழிக்கும் அளவுக்கு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது பேண்டு... குறிப்பாக, இன்றைய இளசுகளை பெரிதும் கவர்ந்து கொண்டிருக்கிறது! 

இதைப் பற்றி, சென்னையில் 75 ஆண்டு காலம் பேண்டு வாசிப்பதையே பாரம்பரிய தொழிலாக செய்துவரும் 'பாரத் பேண்டு குழு'வின் நிறுவனர் மற்றும் சென்னை பேண்டு வாசிப்போர் அமைப்பின் முன்னாள் தலைவர் சுந்தரம், ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick