புடவைக்கு ஏற்ற மாலை ! | Special marriage garlands - Aval Manamagal | அவள் மணமகள்

புடவைக்கு ஏற்ற மாலை !

கல்யாண மாலை

வாழ்க்கையில் சில சுப தருணங்கள், என்றென்றும் மறக்க முடியாதவை. அத்தகைய தருணங்களுக்காக நாம் மெனக்கெடுவதில் தவறேதும் இல்லைதானே! திருமண உடை, அலங்காரம் என்று நாம் முக்கியத்துவம் கொடுக்கும் லிஸ்ட்டில், பூமாலைக்கு இப்போதெல்லாம் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நிச்சயதார்த்தம், நலங்கு, திருமண வரவேற்பு, முகூர்த்தம் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ற தனித்துவத்தோடு, இந்த பூமாலைகள் தற்போது தயாராகின்றன! 

இந்த மாலைகளைப் பற்றிக் கேட்டால்... ''போட்டிருக்கற டிரெஸ்களுக்கு தகுந்த மாதிரி, பூமாலையோட நிறங்களையும்கூட அமைச்சுக்க முடியும் தெரியும்ல...'’ என்று உற்சாகம் பொங்க பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அம்ரிதா. இவர், இத்தகைய விசேஷ மாலைகள் தயாரிப்பு பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர். இளம் பெண்கள், இல்லத்தரசிகள், பார்லர் வைத்திருப்பவர்கள், பிஸினஸ் செய்ய நினைக்கும் பெண்கள் என்று பலரும் வந்து கற்றுக் கொள்கிறார்கள். ஒரு மாதத்துக்கு 3,000 ரூபாய் ஃபீஸ். பயிற்சிக்கான பூ, நார் எல்லாம் அவரே கொடுத்துவிடுகிறார். இது தவிர எம்ப்ராய்டரி, பெயின்ட்டிங் போன்ற வகுப்புகள் எடுத்து வருகிறார் அம்ரிதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick