கல்யாண கொலு... அசத்தும் இல்லத்தரசிகள் !

கைவண்ணம்

மாறும் காலங்களுக்கு ஏற்ப, கல்யாண வைபவங்களிலும் புதுப்புது விஷயங்கள் சேர்ந்து கொண்டே போகின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு... கல்யாண கொலு! திருமண நிகழ்வை மேலும் மேலும் பளீரிடச் செய்வதற்காக, திருமணம், நிச்சயம் போன்ற விசேஷங்களில் அதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை கொலு பொம்மைகள் மூலம் காட்சிக்கு வைத்து... நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தின் எழில் கூட்டுவதை தொழிலாக செய்து வருகிறார்கள் சென்னை, மேற்கு மாம்பலம், முதுகலைப் பட்டதாரிப் பெண்களான கவிதா, ஜெயஸ்ரீ, அஞ்சனி, சத்தியபாமா! 

தங்களின் கூட்டணி பற்றி முதலில் ஆரம்பித்த அஞ்சனி, ''கவிதா, டீச்சரா வேலை பார்த்த ஸ்கூல்லதான் எங்களோட குழந்தைகள் படிக்கிறாங்க. அங்கதான் நாங்க அறிமுகமானோம். கவிதாவுக்கு கை வேலைப்பாடுகளில் ஆர்வம். ஓவியங்கள், மண்பானை அலங்காரங்கள், இன்டீரியர் வேலைகள்னு நிறைய செய்வாங்க. பழங்களாலேயே அலங்காரம் பண்றது, தேங்காய்ல மணி கோத்து காட்சிக்கு வைக்கறதுனு அசத்துவாங்க. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு வீட்டில் சும்மா போரடிச்சுட்டிருந்த நாங்க, ஏதாவது தொழில் செய்யலாமேனு தேடல்ல இருந்ததால... கவிதாவோட கைவேலைப்பாடுகள்ல கவனத்தை திருப்பினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick